நாகர்கோவிலில் ஒரு வழி பாதையில் தடையை மீறி வந்த 50 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருக்கும் ஒரு வழி சாலைகளில் தடையை மீறி ஆட்டோக்கள் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததின் பேரில் போலீஸ்சார் நேற்று மாலை அவ்வை சண்முகம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது கட்டபொம்மன் சந்திப்பிலிருந்து மீனாட்சிபுரம் நோக்கி ஒரு வழி பாதையில் ஏராளமான ஆட்டோக்கள் வந்தது. இதனை போலீசார் தடுத்து நிறுத்தி அனைத்து ஆட்டோக்களையும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு […]
