கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமலிருந்த கடைகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். இதனை அடுத்து 3 ஜவுளி கடைகளுக்கு மற்றும் 1 செல்போன் கிடைக்கு தலா 500 ரூபாய் அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். மேலும் ஒரு திருமண மண்டபத்திற்கு 1000 ரூபாய் அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். […]
