விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் என். ஜி.ஆர் ரோடு கடைவீதியில் வணிக வளாகங்கள், வியாபாரக் கடைகள் நிறைந்திருப்பதால் எப்போதும் அங்கு போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்நிலையில் கடைவீதிக்கு வரும் வாகனங்களை பொதுமக்கள் சிலர் அங்குமிங்கும் நிறுத்தி விட்டுச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் மஞ்சள் கோடுகளை வரைந்துள்ளனர். ஆனால் சிலர் விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை நிறுத்துகின்றனர். […]
