விதவைப் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த 2009-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவாலும், அவரது மகன் கடந்த 2013-ஆம் ஆண்டு விபத்திலும் இறந்து விட்டனர். இதனால் மேகலா அவரது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேகலா நெல்லை மாவட்ட ஆட்சியர், சேரன்மாதேவி உதவி மாவட்ட ஆட்சியர், பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் சிதம்பரத்திலுள்ள தனக்கு சொந்தமான […]
