ரஷ்யாவில் நடைபெறும் விண்வெளி பயிற்சிக்கு தமிழக மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரகசியா, வேதாஸ்ரீ ஆகிய இரு மாணவிகள் பதினோராம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் ரகசியா, வேதாஸ்ரீ ஆகிய இருவரும் சென்னையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட உலக அளவிலான வானியல் ஆராய்ச்சிகள் தொடர்பான போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் போட்டியில் ரகசியா மற்றும் வேதாஸ்ரீ ஆகிய இருவரும் முதல் பத்து இடங்களுக்குள் வந்து ரஷ்யாவில் நடைபெறும் வானியல் […]
