விண்ணப்ப நிராகரிப்புக்கான காரணம் வருகிற காலங்களில் விரிவாக ஆயிரம் எழுத்துகளில் தெரிவிக்கப்படும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. சேலம் மாவட்டத்தை சோ்ந்த சின்னப்பையன் என்பவா் கடந்த வருடம் இறந்தாா். இதனையடுத்து அவரது தாயாா், சின்னப்பையன் வாரிசு சான்றிதழ் கேட்டு இ-சேவை வாயிலாக விண்ணப்பம் செய்தாா். இவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அவா் வழக்குத் தொடா்ந்தாா். இது குறித்த அவரது மனுவில், நேரடியாக வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் போது அதனை […]
