நடிகர் விஜய் இன்று பனையூரில் உள்ள அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் ஆனந்த், ரசிகர்கள் நீண்ட நாட்களாக விஜய்யுடன் போட்டோ எடுக்க கேட்டதாகவும், அதற்காக நேரம் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் விஜய் அரசியலில் ஈடுபடுவாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “அது தொடர்பாக விஜய் பேசுவார்” என்றார்.
