தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரின் ஆக்சன் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வெற்றி தான். அந்த அளவிற்கு தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படுபவர். நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த். இவருக்கு விஜய பிரபாகர் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். […]
