படகில் உள்ள பலகை மீது தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஜெகதாப்பட்டினம் பகுதியில் தேசிங்கு என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தேசிங்கு தனக்கு சொந்தமான விசைப்படகில் மாணிக்கம் உள்பட 4 மீனவர்களுடன் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது படகில் உள்ள பலகை மீது மாணிக்கம் தவறி விழுந்துள்ளார். இதனால் மாணிக்கத்திற்கு பலமாக நெஞ்சில் அடிபட்டதால் […]
