ராமேஸ்வரத்தை சேர்ந்த மீன்பிடி விசைப்படகை இலங்கை நீதிமன்றம் அரசுடமையாக்க உத்தரவிட்டுள்ளது. சென்ற மார்ச் மாதம் 23ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு விசைப்படகில் ஆறு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றார்கள். இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். சில நாட்களுக்கு முன்பாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் படகை விடுதலை செய்யவில்லை. இந்நிலையில் கைது செய்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விசைப்படகின் உரிமையாளர் சென்ற ஐந்தாம் தேதி கிளிநொச்சி […]
