விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமாட்சிபுரம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சர்வேஸ் என்ற மகன் உள்ளார். கடந்த சில மாதங்களாக சுப்பிரமணியனுக்கு முதுகு தண்டுவடத்தில் நோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் பலன் அளிக்காததால் பாலசுப்பிரமணியன் மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் […]
