திரிபுரா வன்முறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பாஜக பெரும்பாலான்மை வாதம் அடிப்படையில்….. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, தொடர்ந்து ஆட்சியை தக்க வைப்பதன் மூலம், இந்த அரசியலமைப்புச் சட்டத்தை உதறி எறிந்து விட முடியும். தூக்கி எறிந்துவிட முடியும் என்பதுதான் அவர்களின் கனவு திட்டம். ஆட்சிக்கு வருவது என்பது நம்மைப் போல கொஞ்ச நாள் அதிகாரத்திலிருந்து அந்த அதிகாரத்தை சுவைக்கலாம் என்பதல்ல. பிஜேபி காரர்களை அப்படி குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். அவர்கள் வெறும் அதிகார வெறியர்கள் அல்ல. […]
