காட்டுக்குள் இரண்டு நாட்களாக தங்கி இருந்த கேரள இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டரம்பள்ளியை அடுத்திருக்கும் வெலக்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட ஜின்னுக்கா வட்டம் பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் தனது காரை நிறுத்திவிட்டு அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் அவரிடம் விசாரித்த பொழுது கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. மேலும் அவர் தான் ஆராய்ச்சிக்காக இங்கு வந்ததாக கூறிவிட்டு காட்டுக்குள் சென்றார். பொதுமக்கள் காட்டுக்குள் […]
