வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது தமிழ்நாட்டில் தினம் தோறும் பலர் சூதாட்டத்தில் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். இதனால் மன உளைச்சலில் இருக்கும் அவர்கள் தான் மட்டுமில்லாமல் தனது குடும்பத்திற்கே விஷம் கொடுத்து தற்கொலை செய்கின்ற நிகழ்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடை செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்று சூதாட்டத்திற்கு தடை சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. […]
