மூன்று நாட்கள் சிபிசிஐடி காவலில் சிவசங்கர் பாபாவை விசாரிக்க உத்தரவிட்டு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கேளம்பாக்கம் அடுத்த, புதுபாகத்திலுள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு பதிவு செய்து இவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இவர் டெல்லியில் மொட்டையடித்து தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி காவல்துறை உதவியுடன் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர் சென்னைக்கு […]
