தமிழக முழுவதும் நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் நடத்துனராக பணியாற்றிய அண்ணாதுரை என்பவர் 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற நிலையில், இதுவரை தமக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், தமிழக முழுவதும் 1983 […]
