விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் திடீரென இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கெல்லீஸ் சிக்னல் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்த இரண்டு பயணிகளிடம் 500 கிராம் கஞ்சா மற்றும் ஒரு அரிவாள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இரண்டு பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஒருவர் திருவல்லிக்கேணியை சேர்ந்த […]
