நியாய விலை கடை பணியிடங்கள் நிரப்புவது குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோமல் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது, “நமது தமிழ்நாட்டின் வேளாண் கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிக்கான நேர்முகத் தேர்வுகள் பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எந்த தேர்வு நடைமுறைகளும் பின்பற்றாமல், விற்பனையாளராக […]
