சிங்காரப்பேட்டை அருகே பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம், குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மனைவி உமா சங்கரி. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு வைஷ்ணவி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் உமா சங்கருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் வயிற்றுவலி குணமாகவில்லை. […]
