விக்ரவாண்டி அருகில் கார் மோதி நபர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தக்கா மேடு பகுதியில் வசித்து வந்தவர் விஜி(47). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடை வீதிக்கு சென்று உள்ளார். அதன்பின் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது விக்கிரவாண்டி தெற்குப் புறவழிச் சாலையை கடக்க முயலும்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் விஜி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]
