டிராக்டரில் அமர்வதற்கு சோபாவை பயன்படுத்தி பேரணி நடத்தும் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி விஐபி விவசாயி என்று மத்திய மந்திரி விமர்சனம் செய்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடத்தும் மூன்று நாள் டிராக்டர் பேரணி நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இரண்டாவது நாளான நேற்று பஞ்சாபில் டிராக்டர் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். […]
