கன்னியாகுமரியை சேர்ந்த செந்தில்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறேன். நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரி இடம் மாறுதல் கலந்தாய்வு முறையாக நடைபெறவில்லை. வருவாய் துறை அரசாணை எண்:515 நாள்:25.8.2008 இன் படி முறையாக இந்த கலந்தாய்வு நடைபெறவில்லை. குறிப்பிட்ட அரசாணையின்படி கலந்தாய்வு முறையாக நடத்த உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த […]
