Categories
அரசியல் மாநில செய்திகள்

திரும்பி வந்துட்டோம்னு சொல்லு ரஜினி… மு.க.அழகிரி வாழ்த்து…!!!

நடிகர் ரஜினியின் அரசியல் வருகை பற்றி மு.க.அழகிரி வாழ்த்துக்கள் அன்பு சூப்பர் ஸ்டார் என்று தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க… நடராஜனின் சாதனை பயணம் தொடரட்டும்… ஓ பன்னீர்செல்வம் ட்வீட்..!!

இந்திய அணிக்காக முதல் முறையாக விளையாடும் தமிழக வீரர் நடராஜனுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி, ஆஸ்திரேலியா தலைநகரான கான்பெர்ராவில் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழக வீரர் நடராஜன், இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்திய அணிக்காக முதல் முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் நடராஜன் விளையாடுவதால் பல தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திலேயே சேலம் முதலிடம்… முதலமைச்சர் வாழ்த்து…!!!

சீர்மிகு நகரத் திட்ட பணிகளை செயல்படுத்துவதில் சேலம் மாநகராட்சி முதல் இடத்தை பெற்றுள்ளதால் முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். சீர்மிகு நகரத் திட்ட பணிகளை செயல்படுத்துவது பற்றி தரவரிசை பட்டியலில் தேசிய அளவில் சேலம் மாநகராட்சியில் 8வது இடத்திலும், தமிழகத்தில் முதலிடத்திலும் உள்ளது. அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சீர்மிகு நகரத் திட்ட பணிகளை செயல்படுத்துவது குறித்த தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் சேலம் மாநகராட்சி 8வது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டி… முதலமைச்சர் பாராட்டு…!!!

சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டறிந்து விருது பெற்ற மாணவிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வினிஷா உமாசங்கர் என்ற மாணவி இளம் வயதிலிருந்தே அறிவியல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். தற்போது சூரிய சக்தி மூலமாக இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்து ஸ்வீடன் என்ற விருது பெற்றுள்ளார். அந்த சிறுமிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் பதவியில் அமரும் நிதிஷ்குமார்… முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து…!!!

பீகாரில் முதல்-மந்திரியாக பதவியேற்கும் நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பீகாரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து இன்று பதவி ஏற்பு விழா மாலை நடைபெறுகிறது. நிதிஷ் குமார் மற்றும் அவரின் மந்திரிசபையில் இடம் பெறுகிற பிற மந்திரிகளுக்கும் கவர்னர் பாகு சவுகான் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். அந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மிக […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மிக முக்கிய நாள்… துணை குடியரசு தலைவர் வாழ்த்து…!!!

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி ஊடக ஊழியர்கள் அனைவருக்கும் குடியரசு துணைத் தலைவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தேசிய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அந்த நாள் தேசிய பத்திரிக்கையாளர் தினமாக 1996 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. நம் ஜனநாயகத்தை கட்டிக் காப்பதில் முக்கிய பங்காற்றி கொண்டிருக்கும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளை கௌரவிக்க கூடிய வகையில் தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் தேசிய பத்திரிக்கையாளர் தினம் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

நல்லாட்சியே முற்போக்கான மாநிலத்தை உருவாக்கும்… பீகார் மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து…!!!

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையில் போட்டியிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நல்லாட்சியை முற்போக்கான மாநிலத்தை உருவாக்கும். பீகார் மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து, தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி உள்ளீர்கள். தேசிய […]

Categories
மாநில செய்திகள்

கிரிக்கெட் ஜாம்பவான்களை திணற வைத்த நடராஜன்… சேலத்திற்கு மிகப்பெரிய பெருமை… முதலமைச்சர் வாழ்த்து…!!!

இந்திய அணியில் தேர்வாகியுள்ள சேலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தமிழக முதல்வர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் விளையாடி கொண்டிருந்த வருண் சக்கரவர்த்தி என்பவர் காயம் ஏற்பட்டதால் டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சேலம் சின்னம்பட்டி பகுதியில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். மேலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்துள்ளார். அதுமட்டுமன்றி துல்லியமான யார்க்கர், தரமான பந்துவீச்சு மூலமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ குடை பிடிப்பவர்களுக்கும் சேர்த்தே மழை பொழிகிறது’… ஜோ பைடனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து…!!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலாஹாரிஸ் ஆகியோருக்கு கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு உலக நாட்டு தலைவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பது, “எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்கும் நான் அதிபராக இருப்பேன் என்று ஜோ பைடன் கூறியுள்ளார். அவரின் பெருந்தன்மைக்கு இதுவே மிகப்பெரிய […]

Categories
உலக செய்திகள்

இந்திய-அமெரிக்க உறவு மேலும் வலுப்பெறும்… ஜோ பைடன்,கமலா ஹாரிஸ் வெற்றி… பிரதமர் மோடி வாழ்த்து…!!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று வெற்றி இலக்கை அடைந்துள்ளார். அதன் மூலமாக அமெரிக்காவில் 46வது அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். […]

Categories
அரசியல்

நெஞ்சம் நிறைந்த என் நண்பன்… நலமுடன் நீண்டநாள் வாழ்க… கமல்ஹாசனுக்கு ஸ்டாலின் வாழ்த்து…!!!

மக்கள் நீதி மய்யம்  கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு திமுக தலைவர் தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் தனது 66வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]

Categories
உலக செய்திகள்

ரங்கோலி மூலம் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்து… கலக்கிய சொந்த ஊர் மக்கள்…!!!

அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி அவரின் சொந்த ஊர் மக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரின் சொந்த ஊர் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம். கமலா ஹாரிஸ் தாய்வழி தாத்தா,பாட்டி மன்னார் குடியை சேர்ந்தவர்கள். அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியை கொண்ட பெண் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய உள்துறை மந்திரி… அமித்ஷா பிறந்தநாள்… முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து…!!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது 56வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரிக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்தக் கடிதத்தில், ” உங்களின் பிறந்த நாளில் எனது […]

Categories
தேசிய செய்திகள்

ஏழை மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்… நவராத்திரி வாழ்த்துக் கூறிய… பிரதமர் மோடி…!!!

நவராத்திரி விழாவையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்துக்களின் முக்கிய திருவிழாவாகக் கொண்டாடப்படும் நவராத்திரி விழா இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி, அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், உற்சவங்கள் மற்றும் கொலு காட்சிகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்களை தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ” நவராத்திரியின் முதல் நாளான இன்று அன்னை […]

Categories
தேசிய செய்திகள்

அப்துல் கலாம் சாதனைகள்… நாளைய தலைமுறைக்கு வழிகாட்டி… கமல்ஹாசன் வாழ்த்து…!!!

அப்துல் கலாம் சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய தலைமுறையினரையும் நல்வழிப்படுத்துவதற்கு உதவும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் மாணவர்களின் வழிகாட்டி என்று போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் அப்துல் கலாம் நினைவுகளை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து மக்கள் நீதி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர்… விரைவில் குணமடையனும் … வட கொரிய அதிபர் வாழ்த்து…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் விரைவில் குணமடைய வேண்டி வட கொரிய அதிபர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்பின் மிக நெருங்கிய ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் வெளியான முடிவுகளில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் 71 ஆவது நிறுவன நாள்… வெளியுறவுத்துறை மந்திரி வாழ்த்து டுவிட்…!!!

சீனா நிறுவப்பட்டதன் 71 ஆவது நிறுவன நாளை முன்னிட்டு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் எல்லையில் மோதல் போக்கு அதிகரித்து கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சீனா நிறுவப்பட்டதன் 71 ஆவது நிறுவன நாள் கடைபிடிக்கப்பட்டது. அதற்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது வாழ்த்துக்களை சீனாவிற்கு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]

Categories
Uncategorized

குடியரசுத் தலைவருக்கு பிறந்தநாள்… வாழ்த்து கூறிய முதலமைச்சர், துணை முதலமைச்சர்…!!!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்த நாளுக்கு தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது 75 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளையொட்டி பல்வேறு தலைவர்களும் தங்கள் வாழ்த்துச் செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.அவ்வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.குடியரசுத் தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனாதிபதிக்கு பிறந்தநாள்… வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி…!!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறந்த நாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தன்னுடைய 75வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றார். அதனையொட்டி பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துச் செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவ்வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ராஷ்டிரபதி ஜிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவளுடைய மிகுந்த நுண்ணறிவு மற்றும் கொள்கை விஷயங்களைப் […]

Categories
மாநில செய்திகள்

திமுகவில் போட்டியின்றி வெற்றி… ரஜினிகாந்த் வாழ்த்து…!!

திமுகவில் போட்டியின்றி பதவியேற்ற இரு தலைவர்களுக்கு ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். திமுக கட்சியின் பொருளாளராகவும் பொதுச் செயலாளராகவும் டி ஆர் பாலு மற்றும் துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த போது இவர்களுக்கு எதிராக எந்த ஒரு வேட்புமனுத்தாக்கல் இல்லாத காரணத்தால் போட்டிகள் ஏதும் இல்லாமல் இந்த பதவியை பெற்றனர். இதனை பல்வேறு தலைவர்கள் தற்போது பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந் தன்னுடைய வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவிக்கும் விதத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இரண்டாம் ஆண்டில் அடிவைக்கும் கல்வி தொலைக்காட்சி… முதலமைச்சர் பாராட்டு…!!!

கல்வி தொலைக்காட்சி இன்றுடன் தனது ஓராண்டை நிறைவு செய்வதால் முதலமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து கூறுகையில், ” ஓராண்டை நிறைவு செய்திருக்கும் கல்வி தொலைக்காட்சி என் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த கல்வி தொலைக்காட்சி பல்வேறு மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து கொண்டிருப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி தொலைக்காட்சியை முதல் நாள் பார்க்க தவறியவர்கள், அதற்கு அடுத்த நாள் யூ டியூப் மூலமாக பார்க்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு […]

Categories
அரசியல்

பிறந்தநாள் கொண்டாடும் விஜயகாந்த்… திமுக தலைவரின் நெகிழ்ச்சி டுவிட்…!!!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். தேமுதிக தலைவரும், புகழ்பெற்ற நடிகருமான கேப்டன் விஜயகாந்த் தனது 68 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தேமுதிக கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை மிகுந்த நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். இந்நிலையில் விஜயகாந்த் பிறந்த […]

Categories
பல்சுவை

பிறந்தநாள் கொண்டாடும் விஜயகாந்த்… வாழ்த்து மடல் அனுப்பிய முதலமைச்சர்…!!!

இன்று பிறந்தநாள் கொண்டாடுகின்ற தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ” இன்று பிறந்த நாள் கொண்டாடும் தங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். திரைப்படத்துறை, அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக பணியாற்றி, நல்ல முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நீடூழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் […]

Categories
மாநில செய்திகள்

“கேல்ரத்னா விருது”… தமிழகத்தைச் சார்ந்த வீரர் சாதனை… வாழ்த்து தெரிவித்த பாஜக தலைவர்…!!

கேல் ரத்னா விருது பெற இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு பாஜக தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேல்ரத்னா விருது பெற இருக்கும் மாரியப்பனுக்கு பாஜக தலைவர் வேல்முருகன் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், “விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான கேல் ரத்னா விருதானது, 2016ஆம் ஆண்டு ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கொடுக்க பரிந்துரை செய்யப்பட்டது, மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது என்றும் […]

Categories
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்… பெரும் தலைவர்கள் வாழ்த்து…!!

நாடு முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பெரும் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில்,” விநாயகர் சதுர்த்தி, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அரவணைக்கும் மக்களின் உற்சாகம், மகிழ்ச்சி, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் வெளிப்பாடு” இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள செய்தியில், “பெரும் கூட்டமும் , பிரம்மாண்ட ஊர்வலங்களும் இதன் அடையாளமாக இருந்தாலும், கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

விநாயக சதுர்த்தி…” பக்தர்களை கஷ்டப்படுத்தாத கடவுள்”… பாஜக தலைவர் வாழ்த்து…!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாஜக தலைவர் வேல்முருகன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியான இன்று பாஜக தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஆனை முகம், குழந்தை சிரிப்பு, எல்லோருக்கும் எல்லா காலத்திலும் முடிந்ததை வைத்து வணங்க வைக்கும் கடவுள் விநாயகர். அரச மரத்தடியில் கூட இவரை தரிசிக்கலாம். வானம் பார்த்த கடவுள் இவர், மஞ்சளிலும் பிடிக்கலாம், சாணியிலும் பிடிக்கலாம். சாலையின் ஓரத்தில் பூக்கும் எருக்கம் பூூ மாலை சாத்தலாம், அருகம்புல் போடலாம் இப்படி எந்தவித் நியமம், […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் விளையாட்டு

லெஜெண்டுகளுக்கு ஓய்வு கிடையாது- தோனி பற்றி திரைபிரபலங்களின் உருக்கம்…!

மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினால் திரைபிரபலங்கள் பலரும் உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை நேற்று வெளியிட்டார். டோனியின் இந்த திடீர் அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஓய்வுபெற்ற தோனிக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கருத்தின் தொகுப்பு. மகேஷ் பாபு: 2011ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து… பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு…!!!

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் பிறந்த நாளிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவருடைய 52வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பதிவு செய்துள்ளார். இது பற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார். பிறந்தநாள் வாழ்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுதந்திர தினம் வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ள ரகுமான்…!!

நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட சுதந்திர தினத்தில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கொரோனா அச்சுறுத்தல் உள்ள காலத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை வலுப்படுத்த வேண்டும், என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஏ. ஆர். ரகுமான் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Categories
உலக செய்திகள்

இந்திய மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள்… இஸ்ரேல் பிரதமர் நெகிழ்ச்சி டுவிட்…!!!

வியக்கத்தகு இந்தியாவின் மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள் என்று இஸ்ரேல் பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் 74 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய மக்களுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” எனது நல்ல […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து… ஆஸ்திரேலிய பிரதமர்…!!!

உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தை இன்று உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஆஸ்திரேலியாவின் நீண்டகால நட்பு நாடு இந்தியா. இரு நாட்டின் உறவுகளும், நம்பிக்கை மற்றும் மரியாதையை அடித்தளமாகக் கொண்டு உருவாகியது. இந்த நட்புறவு மிகவும் ஆழமானது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் 74 ஆவது சுதந்திர தின விழா – தலைவர்கள் வாழ்த்து..!!

சுதந்திர தினத்தையொட்டி தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாட்டின் 74 ஆவது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலக அரங்கில் இந்தியா இன்று வெற்றி நடைபோட்டு வருவதாகவும், தனித்துவம் மிக்க அரசியல் தலைமை, பொருளாதார வளர்ச்சி மற்றும் பண்பாடு கலாசாரத்தின் பயனாக, உலக நாடுகளின் மத்தியில் இந்தியா மதிப்பு மிக்க நாடாக திகழ்கிறது. பொதுமக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை புகழ்ந்து சுதந்திர தின உரை…ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்…!!!

இந்தியா அமைதியை விரும்பும் நாடு என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் கூறியுள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அந்த உரையில்,” உலகம் முழுவதும் கொரோனா என்ற சவாலை அனைவரும் சந்தித்து வருகின்றோம். இந்தியா போன்ற பரந்து விரிந்த, ஏராளமான மக்கள்தொகை கொண்ட நாட்டில், இந்த சவாலை எதிர்கொள்ள சூப்பர் மனித முயற்சிகள் கட்டாயம்  தேவை. இந்த சவாலை […]

Categories
தேசிய செய்திகள்

“சுதந்திர தினம்”… நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து… !!

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கலையாக் கலையே கமல்’- கவிஞர் வைரமுத்து வாழ்த்து…!

கவிஞர் வைரமுத்து உலக நாயகன் கமலஹாசனின் 61 ஆண்டு திரையுலக பயணத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். திரையுலகிற்கு வந்து 61 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார் கமலஹாசன். களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக 1959ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன்பின் திரையுலகில் பன்முக திறமைகளை வெளிப்படுத்தி உலக நாயகன் ஆனார். அரசியல் கட்சியில் தற்போது தலைவராக உள்ளார். இவரின் 61 ஆம் ஆண்டு சினிமா பயணத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். மேலும் திரை உலக […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்”….இந்தியர்கள் டுவிட்டர் பதிவு…!!!

பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் டுவிட்டரில், “பாகிஸ்தானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து கடந்த 1947 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி பாகிஸ்தான் விடுதலை பெற்றது. அதுவரையில்  இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த  பாகிஸ்தான், விடுதலைக்கு பிறகு  தனி நாடாக பிரிந்து சென்றது. இந்தியாவின் வடமேற்கு பகுதியில் சுதந்திரமான இஸ்லாமிய தேசம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, முகமது அலி ஜின்னாவின் […]

Categories
பல்சுவை

புற்றுநோய் பாதித்த சஞ்சய் தத்… குணமடைய வாழ்த்து கூறிய யுவராஜ் சிங்…!!!

சஞ்சய் தத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யுவராஜ் சிங் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர் தனது டுவிட்டர் பதிவில், “மருத்துவ சிகிச்சை பெற இருப்பதால் வேலையில் இருந்து சற்று ஓய்வு எடுத்து கொள்ள விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்திய […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு டிடிவி தினகரன் வாழ்த்து …!!

அதர்மத்தை அடியோடு அகற்றி தர்மம் செலுத்துவதற்கும் சத்தியத்தையும் அன்பையும் நிலைத்திட செய்வதற்கும் கிருஷ்ணர் அவதரித்த திருநாளில் உறுதியேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அமமுக பொதுச் செயலாளர் திரு டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அதர்மம் புரிவோரை அகற்றி, தர்மத்தை நிலைநாட்டி, அறம் தழைத்தோங்கிடச் செய்வதற்காக கிருஷ்ண பகவான் அவதரித்த திருநாளை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

இந்திய சினிமாவின் ஓர் அடையாளம்…. ரஜினியை வாழ்த்திய பிரபல நடிகர்…!!

நடிகர் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 45 ஆண்டு திரையுலக வாழ்விற்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக, ரசிகர்களால் ‘சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். பாலச்சந்தர் இயக்கிய “அபூர்வ ராகங்கள்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. அதன்பின்பே பல்வேறு இயக்குனர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்கிறார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதியுடன் ரஜினி திரையுலகிற்கு வந்து 45 வருடங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்னி ஜெயந்தின் மகனை வாழ்த்திய முன்னணி பிரபலங்கள்…!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சின்னி ஜெயந்த் மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழில் ” கை கொடுக்கும் கை” என்ற படத்தில் அறிமுகமாகிய சின்னி ஜெயந்த் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் இவருடைய மகன் ஸ்ருஜன் ஜெய் இந்தியாவிலேயே எழுபத்தைந்தாவது இடம்பிடித்தது மட்டுமின்றி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார். பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி உனக்கு எல்லாமே நல்லதே நடக்கும்” – சாந்தனுவுக்கு வாழ்த்து

நடிகர் சாந்தனுவை “இனி உனக்கு எல்லாமே நல்லதே நடக்கும்” என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்தியுள்ளார். விக்ரம் சுகுமாரன் “மதயானை கூட்டம்” படத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போது “ராவண கோட்டம்” என்ற படத்தை  இயக்கி வருகிறார். கண்ணன் ரவி தயாரித்து வரும் இப்படத்திற்கு ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார். இது முதல்கட்ட படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது. பின்பு ‘மாஸ்டர்’,’ வானம் கொட்டட்டும்’ போன்ற மற்ற படங்களில் சாந்தனு பிஸியானார். எனவே ‘ராவண கோட்டம்’ படத்தில் நிலை […]

Categories
உலக செய்திகள்

நன்றி எனது நண்பரே… அமெரிக்கா விரும்புகிறது… இந்தியாவை மெர்சலாக்கிய ட்ரம்ப் ….!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் சுதந்திர தின வாழ்த்து கூறியதின் காரணமாக தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப். 1770-ம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த நியூஜெர்சி, தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா ஜார்ஜியா போன்ற 13 குடியேற்ற அட்லாண்டிக் கடல்பகுதிகள்  விடுதலை பெற்று. அமெரிக்கா இம்மாநிலங்களுடன் இணைந்து தனி நாடாக மாறியது.இந்த மாற்றத்தின் காரணமாக அமெரிக்காவின் சுதந்திர தினம்  ஜூலை 4 ஆம் தேதி வருடம் தோறும் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பழனிசாமி பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!!

தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கின்றேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அவரின் வாழ்த்து பதிவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோல முதல்வரின் பிறந்தநாளையொட்டி பல்வேறு கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து […]

Categories
அரசியல்

தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க திமுக போராடும்: மே தின வாழ்த்து கூறி ஸ்டாலின் உரை..!

மே முதல் நாளை நினைவு கூர்ந்திடும் வகையில், திமுக சார்பில் அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துக்களை மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ” தொழிலாளர் சமுதாயத்தின் பக்கம் எப்போதுமே உறுதியுடன் திமுக துணை நிற்கும். கொரோனா பேரிடராலும் மத்திய, மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் தொழிலாளர்கள் பரிதவிக்கின்றனர். தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க திமுக போராடும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச தொழிலாளர் அமைப்பு 101வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பது, […]

Categories

Tech |