நடிகர் கமலஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் வழக்கறிஞர் டி.சீனிவாசன்-ராஜலட்சுமி தம்பதிக்கு 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் தேதி கடைக்குட்டி மகனாக பிறந்தவர் பார்த்தசாரதி என்ற கமலஹாசன். இவருக்கு 2 அண்ணன் ங்களும், ஒரு அக்காவும் இருக்கிறார்கள். தொடக்க கல்வியை பரமக்குடியில் முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் படிப்பை தொடர்ந்தார். மேற்கொண்டு படிப்பை தொடர முடியாமல் போனதற்கு காரணம் சிறு வயது முதலே அவர் […]
