சுப நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் வாழை இலையின் விலை சரிந்து வருவதாக வியாபாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் திருமணம், கோவில் விழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறுவதில்லை. இதனால் பல வர்த்தகங்களும் பாதித்ததோடு வாழை இலையின் வர்த்தகமும் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த வாழை இலை வியாபாரி கூறியபோது, 10 ஆண்டுகளுக்கும் மேல் வாழை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர், ஆலாந்துறை, மாதம்பட்டி […]
