நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை சற்று உயர்வடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதியான குச்சிபாளையம், வெங்கரை, பொத்தனூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதனையடுத்து விவசாயிகள் பரமத்திவேலூரில் நடைபெறும் வாழைத்தார் ஏலத்திலும் நேரடியாக […]
