Categories
மாநில செய்திகள்

கோடநாடு வழக்கு : வாளையார் மனோஜுக்கு ஜாமீன்!!

கோடநாடு வழக்கில் சிறையிலுள்ள வாளையார் மனோஜுக்கு ஜாமீன் வழங்கி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதகையை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது, வாரம்தோறும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.. 2 பேர் ஆஜராகி உத்திரவாத ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |