கோவை மாவட்டம் வால்பாறைபகுதியில் சென்ற 10 தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் லேசாக துவங்கிய மழை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து சிறிதுநேரத்தில் கன மழையாக பெய்யத் தொடங்கியது. இந்த மழை விடிய விடிய கொட்டித் தீர்த்ததனால் வால் பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுமட்டுமல்லாமல் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. அதிலும் குறிப்பாக அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. […]
