முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் சிவானந்த நகர் பகுதியை சேர்ந்தவர்கள் 27 வயதுடைய லோகேஷ். இவருடைய தம்பி 21 வயதுடைய வெங்கடேஷ். லோகேஷ் அம்பத்தூர் எஸ்டேட் கலைவாணர் நகரில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் லோகேஷ் கடையில் இருக்கும்போது அவரை பார்ப்பதற்காக அவருடைய தம்பி வெங்கடேஷ் கடைக்கு வந்துள்ளார். அப்போது கடைக்கு 10 பேர் சேர்ந்த கும்பல் […]
