கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி வாலிபர் மாயமானார். சென்னை மாவட்டம், எண்ணூர் காமராஜர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் முகம்மது ஆசிப்(22). இவர் வீடுகளுக்கு பால்சீலிங் போடும் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 18ஆம் தேதி மாலை தனது குடும்பத்துடன் தாழங்குப்பம் அருகில் கடலில் குளித்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென்று எதிர்பாராதவிதமாக கடலில் தோன்றிய ராட்சத அலை முகம்மது ஆசிப்பை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. உடனே பக்கத்தில் இருந்த மீனவர்கள் கடலில் […]
