சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் திருவள்ளூர் தெருவில் ராம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் மூலம் வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மாலதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலதி தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றதால் ராம்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். […]
