கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் அருகில் உள்ள பி.என்.பாளையம் கிராமத்தில் சுப்பிரமணி(35) என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் நெய்வேலி 3-வது வட்டத்தை சேர்ந்த யூசுப் மனைவி மும்தாஜ் (47) என்பவரை கொலை செய்து, நகைகள் கொள்ளையடித்தார். இந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக சுப்பிரமணியை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் போலீஸ் நிலையத்தில் அவர் திடீரென உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
