நாமக்கல் மாவட்டத்தில், தந்தை திட்டியதால் மனமுடைந்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகிலுள்ள தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருக்கு சுபாஷ் என்ற 24 வயதுடைய மகன் இருந்தார். சுபாஷ் அங்கு கோழி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 29ஆம் தேதி அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது தந்தை ராஜேந்திரன், இப்படி குடித்து கொண்டே இருந்தால் உனக்கு எப்படி திருமணம் […]
