ஏரியில் தவறி விழுந்த வாலிபர் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் பரத்குமார்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாதவரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி பரத்குமார் தனது நண்பர்களுடன் புழல் ஏரி ஆலமரம் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி பரத்குமார் ஏரியில் தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பரத்குமாரை காப்பாற்ற முயற்சி செய்தும் […]
