மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் டீசல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் காசித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து அஸ்மிதா, வனபார்வதி என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சங்கீதா தனது கணவனை பிரிந்து சென்றுவிட்டார். […]
