மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியில் ஏறி சென்று வாலிபர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் தோட்டராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் வசிக்கும் ஜோதிலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தோட்டராஜா ராமநாதபுரம் மகா சக்தி நகர் பகுதியில் வசித்து வரும் தனது சகோதரி மகாலட்சுமி என்பவரின் வீட்டில் இருந்து தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தோட்டராஜா […]
