பெட்ரோல் ஊற்றி அண்ணனை கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் பட்டு நெசவுத் தொழிலாளியான புருஷோத்தமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லாரி டிரைவரான ராஜசேகர் என்ற தம்பி இருக்கின்றார். இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராஜசேகரின் இருசக்கர வாகனத்தை புருஷோத்தமன் இரண்டு நாட்களாக பயன் படுத்திவிட்டு வீட்டிற்கு வந்து வைத்துள்ளார். அதன்பிறகு புருஷோத்தமன் மற்றும் ராஜசேகருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]
