வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குழந்தை காலனியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான பாரதிதாசன்(30) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மணிவண்ணன் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு பாரதிதாசன் தனது தம்பி பாண்டியராஜ் என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது மணிவண்ணனின் உறவினர்களான சுபாஷ் , […]
