அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அ.தி.மு.க மாவட்ட நிர்வாகியாகவும், அய்யகோடு பகுதியின் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து வருகிறார். இவருக்கு சட்டக் கல்லூரியில் படிக்கும் லிபின் ராஜா என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 4-ஆம் தேதி லிபின் ராஜா கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு […]
