முகநூலில் பழகிய பெண்ணுக்காக நண்பனை தாக்கிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள வெள்ளாளப்பட்டியில் சுபாஷ்(25) என்பவர் வசித்து வருகின்றார். இவர் முகநூலில் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பெண்ணிடம் சுபாஷ் நண்பர் மணிகண்டன் என்பவர் பேச தொடங்கியதால் நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தன்று சுபாஷ் மற்றும் அவரது நண்பர்களான தினேஷ்குமார், வெங்கடேசன், மனோஜ்குமார் விக்ரமாதித்தன் ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். […]
