வாலிபர் கம்பத்தின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியில் சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சரவணன் அப்பகுதியில் உள்ள கோரிமேட்டிற்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் காவல்துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனையடுத்து சரவணன் அவ்வழியாக சென்ற போது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி வண்டிற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால் சரவணனிடம் மொபட்டிற்கான எந்த […]
