அனுமதியின்றி கபடி போட்டி நடத்திய 4 இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட நகர் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் மலைசெல்வம் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள கூரியூர் பள்ளிவாசல் பகுதியில் இளைஞர்கள் அரசு அனுமதியின்றி கபடி போட்டி நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் கூரியூருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் வருவதை பார்த்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். மேலும் […]
