செங்கல்பட்டு மாவட்டத்தில் கிணற்றிற்கு குளிக்க சென்ற வாலிபர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ராமபாளையம் பகுதியில் சிவராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜித்தன் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் ஜித்தன் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் இருவரும் சேர்ந்து நென்மேலி பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது கிணற்றிற்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அணிந்திருந்த உடைகளை கழற்றி வைத்து விட்டு கிணற்றினுள் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். […]
