வாலிபரை ஏமாற்றி பல லட்ச ரூபாய் மோசடி செய்த இளம்பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறும்பவனை மீனவ கிராமத்தில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சென்னையில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இளம்பெண் வாலிபரை காதலிப்பதாக கூறி அவ்வப்போது பணம் வாங்கியுள்ளார். இதுவரை 3 லட்சத்திற்கும் மேல் அந்த வாலிபரிடம் பணம் பறித்துள்ளார். […]
