இரவில் சாலையை கடக்க முயன்ற நபர் மீது அடையாளம் தெரியாத கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் சேர்க்காடு ரோட்டிலுள்ள, இந்திராநகர் பகுதியில் 45 வயதான செந்தில் வசித்து வந்துள்ளார். இவர் ஓரகடம் அடுத்த குன்னவாக்கம் ஜங்ஷன் அருகிலுள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி இரவு வேலைக்காக பஸ்ஸில் சென்ற அவர் குன்னவாக்கம் பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளர். இதைத்தொடர்ந்து வண்டலூர், வாலாஜாபாத் சாலை […]
