வருவாய்த்துறையில் பணியின்போது இறந்த அலுவலர், பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இரக்கத்தின்படி பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை பணியின்போது உயிரிழந்த அலுவலர் மற்றும் பணியாளர்களின் வாரிசுகள் 7 நபருக்கு இரக்கத்தின்படி பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து ஆலத்தூர் கிராம உதவியாளராக பணிபுரிந்து இறந்த ஜெய்கதிரவன் மனைவி சத்யா என்பவருக்கு குடவாசல் வட்டத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராகவும் மற்றும் நன்னிலம் தனி தாசில்தாராக வேலை பார்த்து […]
