தமிழகத்தில் இனி வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் என இரண்டு நாட்கள் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மக்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தடுப்பூசி பெற தகுதியான நபர்கள் 73 சதவீதம் பேர் முதல் தடுப்பூசியும், 35% பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. […]
