Categories
தேசிய செய்திகள்

உலகின்‌ சிறந்த ரயில்வே நிலையமாக மாற்றுவதற்கு ரூ. 7000 கோடி நிதி ஒதுக்கீடு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 8-வது தமிழக குழுவின் பிரதிநிதிகளுடன் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உரையாடினார். அப்போது இந்த பயணத்தின் போது தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை பிரதிநிதிகள் மத்திய அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். அதன் பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக காசி மற்றும் தமிழகம் இடையே “காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயில்” என்ற […]

Categories
தேசிய செய்திகள்

நடுராத்திரியில் நடமாடும் பேய்…. மொட்டை மாடியில் வெள்ளை உடை…. பயங்கர வீடியோ….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் சில நாட்களாகவே நள்ளிரவில் பேய் நடமாட்டம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். அதை ஒரு வீடியோ காட்சியும் தற்போது உறுதி செய்துள்ளது.அந்த வீடியோவில் வெள்ளை உடை அணிந்த உருவம் ஒன்று மொட்டை மாடியில் அமர்ந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.அதனைப் பார்ப்பவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி பதற வைக்கும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக போலீசார் மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

நடுவானில் விமானத்தின் கதவைத்திறந்த பயணி….பரபரப்பு சம்பவம்..!!

டெல்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்பட்ட விமானத்தில் பயணி ஒருவர் நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணி ஒருவர் நடுவானில் விமானம் பறக்கும் போது எமர்ஜென்சி கதவை திறக்க முயன்றார். இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் விமான பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் விமானம் அவசர அவசரமாக வாரணாசியின் தரையிறக்கப்பட்டது இதையடுத்து அந்த நபரை போலீஸில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் விமானத்தில் இருந்தவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண பரிகாரம் செய்த சிம்பு… கங்கையில் தீப வழிபாடு… வைரல் புகைப்படம்…!!!

வாரணாசியில் உள்ள கங்கையாற்றில் திருமணப் அதிகாரத்திற்காக தீபமேற்றி நடிகர் சிம்பு வழிபட்டார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிலம்பரசன் என்கிற சிம்பு. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாநாடு படத்திலும் சிம்பு நடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இதற்கடுத்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் […]

Categories
தேசிய செய்திகள்

பயப்படாதீங்க பாதுகாப்பானதுதான்…. நான் எல்லாம் செய்வேன்…. மக்களிடம் உரையாடிய மோடி….!!

வாரணாசியில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக உரையாடியுள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மக்களிடம் இன்று  காணொலிக் காட்சியின் மூலமாக உரையாற்றியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, கொரோனா தடுப்பூசி பங்களிப்பில் நாடு முழுமை அடைந்துள்ளது. மேலும் இரண்டு தடுப்பூசிகளை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. மேலும் கடந்த ஆறு வருடங்களில் மருத்துவத்துறை மற்றும் அதன் கட்டமைப்புகளில் வாரணாசி நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மேலும் தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் அலுவலகம் விற்பனைக்கு… “OLX-ல் விளம்பரம்”… 4 பேர் கைது..!!

பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற அலுவலகத்தை விற்பனை செய்வதாக OLX ல் விளம்பரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு வந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்யத் தொடங்கினார். ஆன்லைன் விற்பனை தளமான ஓஎல்எக்ஸ் இல் ஒரு சிலர் 7.5 கோடிக்கு பிரதமர் அலுவலகத்தை விற்பனைக்கு வைத்துள்ளனர். வாரணாசியில் குருதம் காலணியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தை லட்சுமிகாந்த் ஆஷா என்ற நபர் ஓஎல்எக்ஸ் இல் […]

Categories

Tech |