கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இந்தியாவில் 200 முதல் 400 ரூபாய்க்கு கிடைக்கும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். அதிலும் 15 வயது முதல் 44 வயது வரையிலான பெண்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே புற்று நோய்களில் இரண்டாவது இடத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருக்கின்றது. இதற்கு எதிரான தடுப்பூசியை, புனேவை சேர்ந்த இந்திய சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ளது. […]
