மனைவியை கொன்ற கணவரை வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தபோது கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் வசித்து வந்தவர் ஐயப்பன். இவர் மணலி பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை தாய் வீட்டிற்கு சென்றிருக்கும் நிலையில் சந்தேகத்தின்பேரில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இதையடுத்து அவருக்கு திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறை தண்டனை பெற்று கொடுத்தனர். இந்நிலையில் தற்போது விடுதலையாகி ஒரு வருட காலமாக தான் வெளியில் […]
